இலங்கையில் கொவிட் 19 சமூக பரவல் இதுவரை ஏற்படவில்லை

தொற்றுநோயியல் அறிவியல் பூர்வமாக இந்நாட்டினுள் கொவிட் 19 தொற்று இதுவரை சமூக தொற்றாக மாறவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

அநேகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட மேல் மாகாணத்தினுள் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

x