திரைப்படத் துறைக்கு வழங்கப்பட்டுள்ள வரி சலுகைகள்.

உள்ளூர் திரைப்படத் துறையை மேம்படுத்துவதுவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கும் போது வழங்கப்பட்ட வரி சலுகைகள் நல்லாட்சி அரசாங்கத்தினால் ரத்து செய்யப்பட்டிருந்தது.

எனவே அது தொடர்பாக அண்மையில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கமைய ரத்து செய்யப்பட்ட வரி சலுகைகளை மீண்டும் வழங்க முடிவு செய்துள்ளதாக பிரதமரின் அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்று நிதி அமைச்சின் செயலாளர் உட்பட குழுவொன்றினால் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி, திரைப்பட தயாரிப்பு மற்றும் திரைப்பட காட்சிப்படுத்தல் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு கட்டண சலுகைகள் வழங்கப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.

மேலும், ஒரு திரைப்படத்தின் தயாரிப்பில் ஏற்படும் செலவுகளுக்கான வரி சலுகைகள் மற்றும் திரைப்படத் திரையிடல்களின் வருமானத்திற்கான வரி சலுகைகள் வழங்குவது தொடர்பாகவும் இந்த கலந்துரையாடலின் போது பரிசீலிக்கப்பட்டுள்ளன.

x