நாட்டின் அநேக பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை.

நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்னர் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான வானிலை நிலவக்கூடும்.

சில பகுதிகளில் 50 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்கு பின்னர் மழையுடனான வானிலை நிலவுவதோடு, சில சந்தர்ப்பங்களில் 75 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

அத்துடன், இடியுடன் கூடிய மழைப் பெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது,

இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களிலும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எவ்வாறாயினும் நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களில் குறைவடையும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, 74 பிரதான நீர்த்தேக்கங்களில் 28 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொலன்னறுவை – மெதிரிகிரிய பகுதியில் குருகொடவெல்ல, திவுல்பிட்டிய மற்றும் திவுல்தமன பகுதிகளில் அதிகளவான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

மேலும் கடந்த சில நாட்களாக நிலவும் மழையுடனான வானிலை காரணமாக வவுனியா – பாவற்குளம், மயிலங்குளம் உள்ளிட்ட குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக அதனை அண்மித்துள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

x