அவன்தி தேவி பெண் சிறுவர்கள் காப்பகத்தின் தலைமை காவலர் கைது

அனுராதபுரத்தில் உள்ள அவன்தி தேவி பெண் சிறுவர்கள் காப்பகத்தின் தலைமை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த காப்பகத்தில் சிறுவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினை தொடர்பில் கடந்த தினங்களில் அத தெரண உகுஸ்ஸா நிகழ்ச்சியின் ஊடாக தெரியப்படுத்தியதை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் 52 சிறுவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

x