அனுராதபுரத்தில் நடத்தி வரப்பட்ட விபச்சார விடுதி

சில காலமாக அனுராதபுரத்தில் நடத்தி வரப்பட்ட விபச்சார விடுதியொன்று காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டது.

இந்த விபச்சார விடுதியினை சுற்றுலா விடுதி என்ற பெயரில் நடத்தி வந்துள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு விலைகளில் தொலைபேசி அழைப்புகள் மூலம் இந்த மோசடி மிக நுட்பமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணையின் போது மேலும் தெரியவந்துள்ளது.

அத்துடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

மேற்படி கைதாகிய பெண்கள் 23, 41, 43 வயதுடையவர்கள் என்பதோடு இவர்கள் வவுனியா, கெபத்திகொல்லேவ, தேவாநம்பியதிஸ்ஸபுர போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

28 வயதான கைதான பெண் 8 மாத கர்ப்பிணி என காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

அத்துடன் சுற்றுலா விடுதி என்ற பெயரில் நடத்தப்பட்ட விபச்சார விடுதியின் உரிமையாளரையும் கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

41 வயதான குறித்த நபரிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் 2 கிராம் மற்றும் 230 மில்லிகிராமினை கைப்பற்றியதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்திருந்தனர்.

x