வெளிநாடுகளில் சிக்கியிருந்த 300 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 300 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 10 விமானப் பயணங்களை மேற்கொண்டு இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதோடு இதில் 95 பேர் தென்கொாியாவிலிருந்து வருகை தந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தொிவித்துள்ளார்.

இதேவேளை மேலும் 437 பேர் நேற்றைய தினம் தங்கள் தொழில் நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறியிருப்பதாக தொிவிக்கப்படுகின்றது.

இவர்களில் 177  பேர் பஹ்ரைன் நோக்கி புறப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தொிவித்தார்.

x