முச்சக்கர வண்டியில் கஞ்சா கடத்திய மூவர் கைது

வியாபார நோக்கத்துடன் சுமார் 2 லட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்ற மூவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கை கொடிகாமம் மிருசுவிலில் இன்று 8 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

பளையைச் சேர்ந்த இருவரும் கொக்குவிலைச் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு கிராம் கஞ்சா போதைப்பொருள், முச்சக்கரவண்டி மற்றும் அலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் (எஸ்எஸ்பி) வழிகாட்டலின் கீழ் உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரே இந்தக் கஞ்சா கடத்தலை முறியடித்தனர்.

சந்தேக நபர்கள் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர். சான்றுப்பொருள்களும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் இன்று சாவகச்சேரி நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.

x