ரோஹன டி சில்வா, காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்.

திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவரான ரத்மலானே ரொஹா என்ற ரோஹன டி சில்வா, காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்.

நீர்கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 3 மணியளவில் இயந்திரப் படகு ஒன்றின் மூலம், அவர் தப்பிச் செல்ல முயற்சித்தபோது, துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

இதன்போது, அவரிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும், ஒரு இவட்சம் இந்திய ரூபாவும் மீட்கப்பட்டுள்ளன.

குருநாகல் பகுதியில், காவல்துறை அதிகாரி ஒருவரை துப்பாக்கிச்சூட்டில் கொலை செய்தமை உள்ளிட்ட மனித சில கொலைகள் தொடர்பில், ரத்மலானே ரொஹா மீது குற்றம். சுமத்தப்பட்டுள்ளன.

அத்துடன், அவர் முன்னணி போதைப்பொருள் வர்த்தகர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.