கொரோனா பாதுகாப்பு திட்டம் முன்னெடுப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் 2021 ம் ஆண்டு முதலாம் தவணைக்கான பாடசாலைகள் எதிர்வரும் 11ஆம் திகதி மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.

தரம் ஒன்றை தவிர ஏனைய வகுப்புக்களை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு எடுத்துள்ளது.

பாடசாலைகள் ஆரம்பிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் அடங்கி விளக்கங்கள் சுகாதார மற்றும் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய ஒவ்வொரு பாடசாலையிலும் அதிபர்கள், ஆசிரியர், பெற்றோர்கள் இணைந்து இந்த பாதுகாப்பு நடைமுறையினை முன்னெடுக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு கல்வி அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளன.

இந்த சுகாதார நடைமுறைகளை முறையாக திங்கட் கிழமை முதல் முன்னெடுப்பதற்காக ஹட்டன் கல்வி வலயத்தில் இன்றைய தினம் பரீட்சார்த்த நடவடிக்கை ஹட்டன் வலயக் கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டன.

இந்த முன்மாதிரியான நடவடிக்கை ஹட்டன் கல்வி வலயத்தில் குயில்வத்தை தமிழ் மகா வித்தியாலத்தில் கொரோனா தொற்று பரவாமல் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து பார்த்ததுடன் அவர்களுக்கு ஆலோசனைகளும் இதன் போது வழங்கப்பட்டன.

இதன் போது மாணவர்களுக்கிடையில் ஒரு மீற்றர் இடைவெளி பேணுதல், கை கழுவுதல், முகக்கவசம் முறையாக அணிதல் தொற்று நீக்கிகள் பயனப்டுத்துதல், மாணவர்கள் ஆசிரியர் நோயுரும் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியன இதன் போது முழுமையாக விளக்கப்பட்டன.

குறித்த பாடசாலையில் வகுப்புக்கள் மற்றும் சுற்றுப்புற் சூழல் தொற்று நீக்கம் செய்யப்பட்டதுடன் மேசைகள் கதிரைகள் ஆகியன வர்ணங்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டன.

ஹட்டன் கல்வி வலயத்தில் 150 பாடசாலைகளில் ஒரு மவுன்ஜீன் பாடசாலையினை தவிர ஏனைய 149 பாடசாலைகளும் திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளதாகவும் இதில் வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பலர் மவுன்ஜீன் பிரதேசத்தில் உள்ளதனால் அப்பாடசாலையை மாத்திரம் சுகாதார அறிவுறுத்தலுக்கு அமைய எதிர்வரும் புதன்கிழமை திறப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கல்விப்பணிப்பாளர் தெரிவித்தார்.

x