பெறுமதியான தொல்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது.

பெறுமதியான தொல்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல்களின்படி காவல்துறை விசேட அதிரடிப்படையினரினரால் நடத்தப்பட்ட சோதனையில் அனுராதபுரம் இராஜாங்கனையை சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு வெண்கல கலசம், ஒரு இறை சிற்பம், இரு காளி அம்மனின்; சிற்பங்கள் , ஒரு கலசம், ஒரு தங்கப் ஆபரண பெட்டி, இரு யானைத் தந்தங்கள், ஆலய மணியின் ஒரு பகுதி மற்றும் உலோக வாள் போன்றவற்றை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் குறித்த சந்தேக நபர் பல சந்தர்ப்பங்களில் தொல்பொருட்களை காண்பித்து அவற்றை விற்பனை செய்வதாகக் கூறி கடந்த 10 வருட காலமாக பல வியாபாரிகளிடமிருந்து பண மோசடி செய்துள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட நபர் மற்றும் தொல்பொருட்களை கிரிபாவ காவல்துறையிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

x