எஸ். டபிள்யூ. டி பண்டாரநாயக்கவின் 122 ஆவது ஜனன தினம்.

இன்று முன்னாள் பிரதமர் மறைந்த எஸ். டபிள்யூ. டி பண்டாரநாயக்கவின் 122 ஆவது ஜனன தினம் காலிமுகத்திடலில் அமைந்துள்ள பண்டாரநாயக்க உருவச்சிலைக்கு முன்பாக நினைவு கூரப்பட்டது.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் சுனேத்ரா குமாரதுங்க ஆகியோர் முதலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியதோடு சிலை வணக்கத்தினையும் மேற்கொண்டனர்.

அத்துடன் இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் இந்த நிகழ்வில் கலந்து பண்டாரநாயக்க உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தியதோடு சிலைவணக்கதிலும் ஈடுபட்டனர்.

x