Traffic Bot

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை முன்வைத்த ரிஷாட் பதியூதீன்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றைய தினம் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தாம் வழங்கிய சாட்சியம் என கூறி திரிவுப்படுத்தப்பட்ட தகவல்களை அமைச்சர் வீமல் வீரவங்ச அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வெளியிட்டிருந்தார்.

இதற்கு எதிராகவே இன்றைய தினம் தாம் முறைப்பாட்டை பதிவு செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதீயுதீன் குறிப்பிட்டார்.

x