டெங்கு சூழலை வைத்திருந்த 10 பேருக்கு எதிராக வழக்கு

டெங்கு பரவும் நிலையில் வீட்டுச் சூழலை வைத்திருந்த 10 பேருக்கு எதிராக சுகாதார பரிசோதகர்களால் வவுனியா நீதிமன்றத்தில் நேற்று 7ந் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வவுனியாவின் பண்டாரிக்குளம், வைரவபுளியங்குளம், குருமன்காடு உள்ளிட்ட நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் இவ் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொது சுகாதார பரிசோதகர்களுடன் இணைந்து, பொலிஸாரும், சிவில் பாதுகாப்பு குழுவினரும் குறித்த டெங்கு ஓழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது வீடு வீடாக சென்று டெங்கு பரவும் இடங்களை சோதனையிட்டதுடன் டெங்கு பரவும் அபாயத்துடன் காணப்பட்ட வீடுகளுக்கு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன் பலருக்கு எச்சரிக்கை கடிதமும் வழங்கப்பட்டது.

அந்தவகையில் 10 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 5 பேருக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் நீதிமன்றால் அபராதம் விதிக்கப்பட்டதுடன், 5 பேருக்கு எதிரான வழக்கு தவணையிடப்பட்டது.

மழையுடான தற்போதைய காலப்பகுதியில் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் காணப்படுவதனால் வடிகான்கள், வீட்டின் கூரைகளில் நீர் தேங்குவது, குளிர்சாதன பெட்டியின் பின்பகுதி என்பவற்றில் நீர் தேங்குவதால் அவற்றை தினசரி பார்வையிட்டு சுத்தம் செய்யுமாறும் பொதுசுகாதார பரிசோதகரினால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது.

x