உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – எவருக்கும் மன்னிப்பு அளிக்கப் போவதில்லை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய எவருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு அளிக்கப் போவதில்லை என்று நீதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய எந்தவொரு குற்றவாளிக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப் போவதில்லை என்று நீதி அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சட்டமா அதிபருக்கு உரிய தகவல்கள் கிடைத்ததும், உரியவர்களுக்கு எதிராக குற்றப் பத்திரத்தை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

x