Traffic Bot

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு.

காலி சிறைச்சாலையில் 03 பெண் உத்தியோகத்தர்களுக்கும் 34 கைதிகளுக்கும் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் குறித்த சிறைச்சாலையின் 69 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையிலேயே இவ்வாறு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

காலி சிறைச்சாலையில் உள்ள பெண் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதியானதை அடுத்து இவ்வாறு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன்,கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆபத்தை எதிர்நோக்கியுள்ள அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அரசியல் கைதிகளின் உறவினர்களுக்கும், சர்வமத தலைவர்களுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளாக தங்களது உறவினர் நீண்ட கால சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கைதிகளின் உறவினர்கள் சர்வமத தலைவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

தற்போது சிறைக்கைதிகளிடம் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்படுகின்றது.

தங்களது உறவுகள், சிறையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பெரும் அச்சத்தை எதிர்கொண்டுள்ளதால் அவர்களை விரைவில் மனிதாபிமான ரீதியில் விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கைதிகளின் உறவினர்கள் வலியுறுத்தினர்.

x