தற்போதைய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை எளிதாக்க ஆணைக்குழுவொன்று நியமனம்

பொது நலனை நோக்கமாகக் கொண்டு, தற்போதைய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை எளிதாக்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 18 பேர் கொண்ட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவர் கிரிஷான் பாலேந்திர ஆகியோர் ஆணைக்குழுவின் இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆணைக்குழுவின் செயலாளர் பதவிக்கு அமைச்சு செயலாளர் (ஓய்வு) ஜீ.எஸ்.விதானகே நியமிக்கப்பட்டுள்ளார்.

x