பாடசாலை பேருந்துகளை டிப்போக்களில் பெற்றுக் கொள்ள அதிபர்களுக்கு வாய்ப்பு

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்திற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள ´பாசல் சிசு செரிய´ பேருந்துகள் பற்றாக்குறையாக நிலவும் பாடசாலைகளின் அதிபர்கள் தமது பாடசாலைக்கு தேவையான பேருந்துகளை குறித்த டிப்போவில் இருந்து பெற்றுக் கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டு பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, மாணவர்களை பாதுகாப்பாக பாடசாலைகளுக்கு அழைத்து வருவதற்கு அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்படவேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

பாடசாலைக்கு ஒரு மாணவன் வருகை தந்திருத்தால் கூட கல்விச் செயற்பாட்டினை முன்னெடுக்க ஆசிரியர்கள் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

x