டிக்கோயா நகரசபை உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா

ஹட்டன் டிக்கோயா நகரசபை உறுப்பினர் ஒருவர் உட்பட நால்வருக்கு தொற்று உறுதியானதாக பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார்.

இன்று 3ஆம் திகதி காலை வெளியாகிய பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையில் ஏற்கனவே தொற்றுக்குள்ளான அக்கரபத்தனை பிரதேசசபை தலைவருடன் தொடர்பை பேணிய நிலையில் தொற்றுக்குள்ளான ஹட்டன் டிக்கோயா நகரசபையின் உறுப்பினர் ஒருவரின் மகளும், தொற்றாளர் சென்ற கொண்ட பிறந்த நாள் பார்ட்டியில் கலந்துகொண்டதால் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த ஹட்டன் டிக்கோயா நகரசபை 08 உறுப்பினர்களில் ஒருவருக்கும், டிக்கோயா தரவலையில் பெண் ஒருவரும், ஹட்டன் மல்லியப்பு பகுதியில் ஆண் ஒருவருமாக நால்வருகே தொற்று உறுதியாகியது.

இவர்களை சுயதனிமை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அட்டன் டிக்கோயா நகரசபை பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார்.

x