ருவாண்டாவில் இராணுவ விவசாய விசேடநிபுணர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கிருமிநாசினி

படைப்புக்களை கட்டுப்படுத்துவதற்காக ருவாண்டாவில் இராணுவ விவசாய விசேடநிபுணர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கிருமிநாசினி, பயிர்களுக்கு சாதகமான கிருமிகளுக்கு உகந்ததல்ல என பூச்சிக்கொல்லிகள் பதிவாளர் நாயகம் மருத்துவர் ஜே சுமித் தெரிவித்துள்ளார்.

விவசாய துறை அமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பூச்சிக்கொல்லியானது இலங்கையின் சுற்றுச்சூழலில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

படைப்புக்கள் சோளம் உள்ளிட்ட மேலும் சில பயிர்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றமையால், அதிகாரிகளில் தற்போது மீண்டும் அது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு விவசாயத்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் விடுத்திருந்தார்.

இதையடுத்து படைப்புக்களை கட்டுப்படுத்துவதற்காக ருவாண்டாவின் தேசிய விவசாய விசேட நிபுணர்கள் 6 பேர் அடங்கிய குழு ஒன்று இலங்கைக்கு அழைத்துவரப்பட்டது.

பைய்ரேதிராம் என்ற பூச்சிக்கொல்லி அந்த குழுவினர் அறிமுகப்படுத்தப்பட்டது.

பைய்ரேதிராம் என்னும் இந்தப் பூச்சிக்கொல்லியானது, தேனீகள் உள்ளிட்டவற்றுக்கும், மீன்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என பூச்சிக்கொல்லிகள் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த பூச்சிக்கொல்லி தொடர்பில் கவனம் செலுத்துமாறு அமைச்சின் செயலாளரிடம் கடிதம் மூலம் அவர் கூறியுள்ளார

x