அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊழியர்கள் புதுவருடத்தில் தமது கடமைகளை ஆரம்பித்தனர்

2020 ஆம் ஆண்டு எதிர்கொண்ட சவால்களுக்கு மத்தியில் மனம் தளராது 24 மணித்தியாலயமும் தொடர்ச்சியாக தனது கடமைகளை அரசாங்க தகவல் திணைக்களம் உரிய முறையில் நிறைவேற்றியுள்ளது.

இதேபோன்று பிறந்துள்ள 2021ஆம் புது வருடத்திலும் தனது கடமைகளையும், பொறுப்புக்களையும் முன்னதிலும் பார்க்க அர்த்தமுள்ள வகையில் மேற்கொள்ள வேண்டும் என்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவௌ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்கள வளவில் நேற்று 1 ந் திகதி சுகாதார வழிக்காட்டிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி ஊழியர்கள் தமது கடமைகளை ஆரம்பித்த நிகழ்வில் பணிப்பாளர் நாயகம் உரையாற்றினார்.

கடந்த வருடங்களிலும் பார்க்க 2020 ஆம் ஆண்டில் நாடு மாத்திரமின்றி உலக நாடுகள் கொவிட் தொற்று பரவலை எதிர்க்கொண்டது. இதனால் எமது நாடு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் அரசாங்க தகவல் திணைக்களம் பொது மக்கள், நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுடன் தொடர்புப்பட்டு தமது கடமைகளை சிரமங்களுக்கு மத்தியிலும் எந்தவித தாக்கமும் இன்றி மேற்கொள்ள முடிந்தது. ஏனைய ஊடக நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக தொடர்புகளை மேற்கொண்டு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்னதிலும் பார்க்க மிகவும் செயல்திறனான சேவையை நாட்டு மக்களுக்கு வழங்க முடிந்துள்ளமை குறித்து தாம் பெரும் மகிழ்ச்சியடைவதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இந்த பணிக்கு அர்ப்பணிப்புடன் திணைக்களத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் தமது நன்றிகளை தெரிவிப்பதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

தேசிய கொடி ஏற்றி தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அரச சேவையின் உறுதிமொழி வாசிக்கப்பட்டதை தொடர்ந்து பிரித் பாராயணமும் இடம்பெற்றது இதனை தொடர்ந்து ஊழியர்கள் தமது கடைமகளை ஆரம்பித்தனர்.

அரசாங்க தகவல் திணைக்களம்

x