புதிய 20 ரூபா நினைவு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது!

இலங்கை மத்திய வங்கியின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் புதிய 20 ரூபா நினைவு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த நாணயத்தை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கையளித்துள்ளார்.

இந்த நாணயம் 7 பக்க வடிவத்துடன் அலுமினியம் மற்றும் வெண்கலத்தால் ஆனதுடன் 3 ஆயிரம் நாணயங்கள் மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளன.

எனினும் இந்த நாணயம் புழக்கத்திற்கு விடப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி தலைமையகம் மற்றும் மாவட்ட கிளைகளினால் நாணயம் ஆயிரத்து 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

x