மாபெரும் கூட்டணி ஒன்று குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்..!

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான மாபெரும் கூட்டணி ஒன்று குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

தற்போது உருவாக்கப்பட்டு வருகின்ற இந்த கூட்டணியில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இணைய உள்ளன.

இதற்காக உருவாக்கப்படுகின்ற தலைமைத்துவ சபையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தவிசாளராக செய்யப்படுவார் என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

x