Traffic Bot

காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் வேளைகளில் 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான வானிலை நிலவக்கூடும்.

ஊவா மாகாணத்திலும் நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்று 50 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாக்கூடும்.

ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்கு பின்னர் மழையுடனான வானிலை நிலவுவதோடு மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழைபெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x