Traffic Bot

நேற்றைய கொரோனா தொற்றாளர்கள் விபரம்

இலங்கையில் நேற்றைய தினம் (29) 460 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இவர்களுள், வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த இலங்கையர் நால்வரும், வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டவர்கள் மூவரும் ஏனைய 453 பேரும் நாட்டிற்குள் தொற்றுக்குள்ளானவர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகமானோர் (249 பேர்) கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன், கம்பஹா மாவட்டத்தில் 52 பேரும், கண்டி மாவட்டத்தில் 38 பேரும், ஏனைய மாவட்டங்களிலிருந்து 114 பேரும் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் (30) காலை வரையிலும், மினுவங்கொடை ஆடை தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புபட்ட கொத்தணியில் Covid-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 38,321 ஆகும். இவர்களில் 31,167 பேர் தற்பொழுது முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

மினுவங்கொடை ஆடை தொழிற்சாலை கொத்தணி – 3,059 (பூரண குணம் அடைந்துள்ளனர்)

பேலியகொடை மீன் சந்தை கொத்தணி- 35,262

இன்றைய தினம் (30) இலங்கையினுள் Covid-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 42,062 என்பதுடன், இவர்களில் 33,924 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். இன்றைய தினம் (30) வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்களில் 7,943 தொற்றாளர்கள் மேலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்றைய தினம் (30) காலை வரையிலும் கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்களிலிருந்து 704 பேர் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளதாக கொவிட்-19 வைரஸ் பரவல் தடுப்புக்காண தேசிய செயற்பாட்டு மையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இன்று காலை (30) கடந்த 24 மணித்தியாலத்தில் இலங்கையில் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். இதன்படி இன்று (30) வரையிலும் இலங்கையில் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 195 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இன்று (30) காலை QR 668 என்ற பயணிகள் விமானத்தின் மூலம் கட்டாரிலிருந்து 7 பேரும், UL 208 என்ற பயணிகள் விமானத்தின் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 152 பேரும், UL 104 என்ற பயணிகள் விமானத்தின் மூலம் மாலைத்தீவிலிருந்து 25 பேரும், UL 1510 என்ற பயணிகள் விமானத்தின் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 153 பேரும், நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்

மேலும் இன்றைய (30) தினத்திற்க்குள் UL 226 என்ற பயணிகள் விமானத்தின் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 54 பேரும், UL 1042 என்ற பயணிகள் விமானத்தின் மூலம் இந்தியாவிலிருந்து 25 பேரும், UL 102 என்ற பயணிகள் விமானத்தின் மூலம் மாலைதீவிலிருந்து ஒருவரும், UL 190 என்ற பயணிகள் விமானத்தின் மூலம் பங்களாதேஷிலிருந்து 20 பேரும் UL 303 என்ற பயணிகள் விமானத்தின் மூலம் சிங்கப்பூரிலிருந்து 6 பேரும், UL 881 என்ற பயணிகள் விமானத்தின் மூலம் சீனாவிலிருந்து இருவரும், EY 264 என்ற பயணிகள் விமானத்தின் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 14 பேரும் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர்.

இவர்கள் அனைவரும் முப்படையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்ற தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்றைய தினம் (30) வரையில் முப்படையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது 75 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 5,362 பேர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினத்திற்குள் 8,668 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக Covid-19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

x