ஒருவர் மதன லேகியங்களுடன் கைது

தம்பலாகாம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி 738 மதன லேகியங்களை வைத்திருந்த நபர் ஒருவரை இன்று (21) கைது செய்துள்ளதாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தம்பலாகாமம், புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் வெற்றிலை கடையொன்றில் மறைத்து மதன லேகியங்கள் விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 738 மதன லேகியங்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.