Traffic Bot

கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்ட தாதிக்கு கொரோனா

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில், பைஸர் பயோ-என்-டெக் கொரோனா தடுப்பு மருந்தைப் போட்டுக்கொண்ட சுமார் ஒரு வாரத்திற்குப் பின், தாதி ஒருவருகுக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர் டிசம்பர் 18 ஆம் திகதி பைஸர் பயோ-என்-டெக் கொரோனா தடுப்பு மருந்தைப் போட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

6 நாள் கழித்து, COVID-19 சிகிச்சைப் பிரிவில் வேலை செய்த பிறகு, வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் அவரிடம் தென்பட்டன.

பரிசோதனையில், அவருக்குக் கொரோனா தொற்று உறுதியானது.

தடுப்பு மருந்து செயல்பட சுமார் 10 முதல் 14 நாள்களாகும் எனக் கூறப்படுகிறது.

மேலும், 2 முறை போட்டுக்கொண்டால் தான், தடுப்பு மருந்து 95 விழுக்காடு திறன்வாய்ந்ததாக இருக்கும் என்பதை வல்லுநர்கள் சுட்டினர்.

x