தீயணைப்பு சேவையை தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கங்கள்..!

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு சேவை திணைக்களத்தின் அவசர தொடர்பு இலக்கம் தற்காலிகமாக செயலிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த தொடர்பு இலக்க சேவையை வழமைக்கு கொண்டுவரும் வரையில், பொதுமக்கள் அவசர நிலையின்போது, தீயணைப்பு சேவை திணைக்களத்தை தொடர்புகொள்வதற்கு புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி 0112 422 222, 0714 466 232 அல்லது 0714 274 161 முதலான தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தீயணைப்பு சேவை திணைக்களத்தை தொடர்புகொள்ள முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

x