கற்குவாரிகளை கண்காணிக்க ஓய்வுபெற்ற இராணுவ உத்தியோகத்தர் நியமனம்

கற்குவாரிகளுக்கு விநியோகிக்கப்படும் வெடிமருந்துகள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதனை அவதானிக்க ஓய்வுப்பெற்ற சிரேஷ்ட்ட இராணுவ உத்தியோகத்தர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

அமைச்சர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மாவநெல்லை பகுதியில் அமையப்பெற்றுள்ள கற்குவாரி ஒன்றுக்கு விநியோகிக்கப்பட்ட வெடி மருந்துகள் காணாமல் போயுள்ளமையை அடுத்து அமைச்சர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

கற்குவாரிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளினால் பொது மக்கள் பாதிப்பிற்குள்ளாகின்றனரா என்பது தொடர்பிலும் அவதானிக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

x