Traffic Bot

உதவும் நோக்கில் யுவதியிடம் தவறாக நடந்துக்கொண்ட நபர்

வாதுவ பகுதியில் விபத்தினால் காயமடைந்த யுவதி ஒருவருக்கு உதவும் நோக்கில் தகாத முறையில் நடந்துக்கொண்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 27 ஆம் திகதி யுவதி ஒருவர் தனது பணியை நிறைவு செய்து வீட்டிற்கு செல்வதற்காக முச்சக்கர வண்டியொன்றை நிறுத்தி ஏறியுள்ளார்.

வீட்டிற்கு சமையல் பொருட்கள் வாங்குவதற்காக இடைநடுவில் முச்சக்கர வண்டியை விட்டு இறங்கியுள்ளார்.

இதன்போது பிரிதொரு முச்சக்கர வண்டி யுவதி மீது மோதுண்டுள்ளது.

சிறு காயங்களுக்குள்ளான குறித்த யுவதியை குறித்த முச்சக்கர வண்டி சாரதி வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

வைத்தியசாலைக்கு அழைத்து சென்று பின்னர் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருக்கையில் தவறான வழியில் முச்சக்கர வண்டியை செலுத்தியுள்ளார்.

கூரிய ஆயுதங்களினால் அச்சுறுத்தப்பட்ட நிலையில் யுவதி கடத்தப்பட்டதுடன், யுவதியிடம் முறையற்ற விதத்திலும் முச்சக்கர வண்டி சாரதி நடந்துக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஒருவாராக யுவதி குறித்த முச்சக்கர வண்டி சாரதியிடமிருந்து தப்பிச்சென்று காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

x