சிரச நிறுவத்திற்கு எதிரான தடையுத்தரவு மேலும் நீடிப்பு

ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த் நிறுவனம் மற்றும் அதன் தலைவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செய்திகளை ஔிபரப்புவதை தடுத்து சிரச நியூஸ் பெஸ்ட் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான MTV தனியார் நிறுவனத்திற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் 08 ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேலதிக மாவட்ட நீதவான் லக்மாலி டி சில்வா முன்னிலையில் இன்று 30  ஆம் திகதி அழைக்கப்பட்டது.

இதன்போது, பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தடையுத்தரவு நீடிப்புக்கு எதிர்ப்பினை தெரிவித்திருந்தார்.

பின்னர் தடையுத்தரவு தொடர்பான விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி மேற்கொள்வதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்படி, தற்போது வௌியிடப்பட்டுள்ள தடையுத்தரவு அன்றைய தினம் வரை நீடிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

x