தம்மிக்க பண்டாரவின் உள்ளூர் மருந்திற்கு நன்னெறி சான்றிதழ் பெற்ற பின்பே மருத்துவ பாிசோதனை

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தயாரிக்கப்பட்டது என்று சொல்லப்படுகின்ற கேகாலை தம்மிக பண்டாராவின் உள்ளூர் மருந்துக்கான நெறிமுறை சான்றிதழைப் பெற்ற பின்னரே அதனை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதேச மருத்துவ ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டு நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட சான்றிதழ் அமைச்சுக்கு கிடைக்கப்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சுதேச மருத்துவ ஊக்குவிப்பு அமைச்சின் குழு இந்த விடயத்தை ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு பாரப்படுத்தியுள்ளது.

மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதில் இல்லை என்பதை உறுதிசெய்த பின்னர், நெறிமுறை சான்றிதழ் பெறும்முன் அதை உள்ளூர் மருந்தாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், நன்னெறி சான்றிதழ் பெறும் வரை, பொது பயன்பாட்டிற்காக அதனை பரிந்துரைப்பது குறித்த இறுதி முடிவு, மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின்னரே எடுக்கப்படும் எனவர் கூறியுள்ளார்.

x