மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோருக்கான ரெபிட் அண்டிஜன்ட் பாிசோதனைகள் தொடர்ந்தும் அமுலில்!

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோருக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் ரெபிட் அண்டிஜன்ட் பாிசோதனைகள் இதுவரை சுமார் பத்தாயிரம் பேருக்கு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.

இதனடிப்படையில் நேற்றைய தினம் 28 ந் திகதி  1359 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அண்டிஜன்ட் பாிசோதனைகளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு இவ்வாறு மேல் மாகாண எல்லைகளில் கண்டு பிடிக்கப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 61 ஆகும்.

அத்தோடு இவர்களோடு தொடர்புடைய மேலும் 315 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.

x