Traffic Bot

9 நாட்களில் 39 பேரை பலி

டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று 29 ஆம் திகதி காலை 6 மணி வரையான காலப்பகுதியில் இந்நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த காலப்பகுதியில் 527 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த காலப்பகுதியில் 122 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், 238 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 130 வாகன விபத்துக்களில் பாரியளவிலான சேதங்கள் மாத்திரம் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த காலங்களின் அவதானிப்பின் படி இந்நாட்டில் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 05 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அதிகளவான வாகன விபத்துக்கள் பதிவாவதாக சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான விபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்காக பொலிஸாரினால் விசேட நடவடிக்கைகள் குறித்த காலப்பகுதியில் செயற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடக பேச்சாளர், வாகன விபத்துக்களில் அதிகளவாக பாதசாரிகள், மோட்டார் சைக்கிள் ஒட்டுனர்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் உயிரிழப்பதாக தெரிவித்தார்.

x