துப்பாக்கியுடன் ஒருவர் கைது

அஹுங்கல்ல, பலபிடிய பிரதேசத்தில் துப்பாக்கியுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படை ஜயவர்தனபுர முகாமின் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

34 வயதுடைய சந்தேகநபர் பலபிடிய, கொரககொட பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று பலபிடிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

x