சிவனொளிபாதமலை பருவகாலம் நாளை ஆரம்பம்

சிவனொளிபாதமலை பருவகாலம் நாளை 29 ஆம் திகதி பௌர்ணமி தினம் ஆரம்பமாக உள்ள நிலையில் இன்று 28 ந் திகதி இரத்தினபுரி கல்பொத்தாவில் ஸ்ரீ ரஜமகா விகாரரையில் இருந்து பிரதிஸ்ட்டை செய்யபட்ட சிலையும் பொருட்களும் சிவனொளிபாதமலைக்கு எடுத்து செல்லப்பட்டது.

சப்ரகமுவ மாகாணத்தின் மத தலைவரும் உவவெல்லச பல்கலைக்கழக விரிவுரையாளருமான தெங்கமுவ தம்மின தலைமையில் விஷேட பூஜைகள் இடம் பெற்று இரத்தின புரி கல்பொத்தவில் ரஜமகா விகாரையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சிலையும் பொருட்களும் எடுத்துவரப்பட்டது.

இதன் போது பிரதிஸ்ட்டை செய்யப்பட்ட பொருட்களை ஏந்திய பேரணி இரத்தினபுரி பலாங்கொட பொகவந்தலாவ நோர்வுட் பகுதிக்கு வருகை தந்த வேளையில் பிரதிஸ்ட்டை செய்யப்பட்ட சிலை இரத்தினபுரி அவிசாவளை – ஹட்டன் ஊடாக நோர்வுட் பகுதிக்கு வந்து இரண்டு பேரணியும் நல்லதன்னி பகுதியை சென்றடைந்தது.

மலை உச்சியில் காணப்படும் 1.8 மீற்றர் அளவான பாறை அமைப்பு கௌதம புத்தரின் காலடி சுவடாக கருதப்படுகிறது. இம்முறை நான்கு வீதிகள் ஊடாக இந்த பேரணி பயணித்தது. மேற்படி நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையினை கருத்தில் கொண்டு அதிகமான பக்தர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

x