பாடசாலைகளை உரிய திட்டங்களின் கீழ் திறப்பதற்கு தீர்மானம்

உரிய திட்டங்களின் கீழ் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளிலுள்ள பாடசாலைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

உரிய திட்டங்களுக்கு அமையவே பாடசாலைகளை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நான்கு நாட்களுக்குள் குறித்த திட்டங்கள் வெளியிடப்படும்.

சுகாதார பாதுகாப்பு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக சகல பாசாலைகளுக்கு கல்வி அமைச்சின் ஊடாக 1050 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

x