முதல் பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நியமனம்!

இலங்கையின் முதலாவது பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபராக பொலிஸ் அத்தியட்சகர் பிம்சானி ஜசிங்காராச்சியை நியமிக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தைச் சேர்ந்தவரே பொலிஸ் அத்தியட்சகர் பிம்சானி ஜசிங்காராச்சி.

இவர் 1997 இல் பொலிஸ் இன்ஸ்பெக்டராக சேவையில் சேர்ந்து, பின்னர் 2017ல் பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டார்.

பெண் பொலிஸ் அதிகாரியை பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு நியமிப்பது இதுவே இலங்கையில் முதல் சந்தர்ப்பமாகும்.