நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 674 பேருக்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 41054 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 614 பேரும், சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 54 பேரும் அடங்குவதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை, பேலியகொடை மீன் சந்தை மற்றும் சிறைச்சாலைகள் ஆகிய கொத்தணிகளுடன் தொடர்புடைய கொவிட் 19 தொற்றுறுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 360 ஆக உயர்வடைந்துள்ளது.