நாளை தனிமைப்படுத்தல் நீக்கப்படும் பிரதேசங்கள்

கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த மேலும் சில பிரதேசங்கள் நாளை காலை 5 மணிக்கு விடுவிக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நீக்கப்படும் பிரதேசங்கள்

கொழும்பில் டேம் வீதி, வாழைத்தோட்டம், மருதானை பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளைக்காலை 5 மணிமுதல் நீக்கப்படும்.

கொம்பனி வீதியில், வேகந்த, ஹூனுப்பிட்டிய கிராம சேவகர் பிரிவுகள், நாளைக்காலை 5 மணிமுதல் நீக்கப்படும்

வௌ்ளவத்தையில் மயூரா பிளேஸ், வெல்லம்பிட்டியிவில் லக்சத செவன வீடமைப்புத் திட்டம் ஆகியனவும் நீக்கப்படும்.

பொரளையில் ஹல்கஹவத்த மற்றும் காளிபுள்ளே வத்தை, ஆகியனவும் நீக்கக்கப்படும்

புதிதாக அமுலாகும் பிரதேசங்கள்

வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவில் புதுக்கடை மேற்கு, கிழக்கு ஆகிய கிராம சேகவர் பிரிவுகள், நாளைக்காலை 5 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

x