தளதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதியை தியவதன நிலமே நிலங்க தேல வரவேற்றார்.
ஜனாதிபதி அவர்கள் மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரரை சந்தித்து, அவரது சுகதுக்கங்கள் பற்றி கேட்டறிந்தார். மல்வத்தை பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய திம்புல்கும்புரே விமலதர்ம தேரரையும் சங்கைக்குரிய நியங்கொட விஜிதசிறி அனுநாயக்க தேரரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரை சந்தித்து ஜனாதிபதி அவர்கள் ஆசீர்வாதங்களைப் பெற்றார். ஜனாதிபதி அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய ஆனமடுவே தம்மதஸ்ஸி நாயக்க தேரர் மற்றும் பதிவாளர் சங்கைக்குரிய மெதகம தம்மாநந்த தேரர் ஆகியோரை சந்தித்து அவர்களது சுகதுக்கங்கள் பற்றி விசாரித்தார்.
அஸ்கிரிய கெடிகே விஹாரைக்கு சென்ற ஜனாதிபதி, அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய வெண்டருவே உபாலி தேரருடன் கலந்துரையாடி விஹாரையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
அஸ்கிரிய மகா பிரிவெனாவுக்கும் சென்ற ஜனாதிபதி, அஸ்கிரிய பீடத்தின் பிரதி பதிவாளர் சங்கைக்குரிய நாரம்பனாவே ஆனந்த நாயக்க தேரரை சந்தித்தார்.