முஸ்லீம்களின் சரீரங்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்

கொவிட் 19 தொற்றால் மரணிக்கும் முஸ்லீம்களின் சரீரங்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக இன்று வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா – மன்னார் பிரதான வீதி பட்டாணிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலயத்திற்கு அருகில் இன்று முற்பகல் இந்த போராட்டம் இடம்பெற்றதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட அனைத்து பள்ளிவாசல்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமானது, ஆழிப்பேரலை அனர்த்தால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதன் பின்னர் சுகாதார நடைமுறைகளை பேணி முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மௌலவிமார்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

x