கலகெதர கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கு பயணத் தடை

பாதுக்கை, கலகெதர கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கு பயணத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுக்கை சுகாதார வைத்திய அதிகாரி சுமித்ர கஹங்கம தெரிவித்தார்.

பாதுக்கை, அருக்வத்தை பிரதேசத்தில் கொவிட்19 தொற்றாளர் ஒருவர மரணமடைந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பாதுக்கை, அருக்வத்தை கிழக்கு பிரதேசத்தில் வசித்து வந்த நபரொருவர் கடந்த தினம் உயிரிழந்திருந்த நிலையில், அவிசாவளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த நபருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பிரதேசத்தில் சுமார் 40 பேருக்கு பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், குறித்த முடிவுகள் நாளை கிடைக்கப்பெற உள்ளதாக வைத்தியர் துமித்ர கஹங்கம தெரிவித்தார்.

x