நீர்கொழும்பு நகர எல்லைக்குள் 12 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி

நீர்கொழும்பு நகர எல்லைக்குள் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 12 பேர் கண்டறியப்பட்டுள்ளதாக அப்பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதார பாிசோதகர் வசந்த சோளங்க ஆரச்சி தொிவித்துள்ளார்.

இதனடிப்படையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 317 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் கண்டறியப்பட்ட 12 தொற்றாளர்களில் 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு இவர்கள் நீர்கொழும்பு – தலாதுாவ பிரதேசத்தில் அமைந்துள்ள நீர்கொழும்பு மாநகராட்சி மன்றத்தின் தொழிலாளர்களின் வீடுகளில் கண்டறியப்பட்டுள்ளனர்.

x