தனமல்வில பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான சடலம் மீட்பு

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிாிழந்த நபரொருவரின் சடலம் தனமல்வில – பலஹருவ பிரதேசத்தில் வீடொன்றினுள் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

உயிாிழந்த 82 வயதுடைய நபாின் உறவினரொருவர் வழங்கிய தகவல்களையடுத்தே இச்சடலம் கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறையினர் தொிவிக்கின்றனர்.

நேற்றைய தினம் காவல் துறையினர் அவ்விடத்திற்கு சென்றிருந்த போதும் உயிாிழந்த நபாின் மூக்கு மற்றும் வாய்ப் பகுதிகளில் இரத்தக் கசிவு ஏற்பட்டிருந்ததாக தொிவிக்கப்படுகின்றது.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் உயிாிழந்த நபர் அவரது இல்லத்தில் மூன்று நண்பர்களுடன் மதுபானம் அருந்திக்கொண்டிருந்ததாக தொிய வந்துள்ளது.

இது கொலைச் சம்பவமா அல்லது இயற்கை மரணமா என்பது குறித்து தொடர்ந்தும் விசாாிக்கப்பட்டு வருவதாக தனமல்வில காவல் துறையினர் தொிவிக்கின்றனர்.

x