வெளிநாட்டு நாணயத்தாள்களை அச்சிடுவதற்காக அச்சிடும் இயந்திரத்தையும் காகிதத்தையும் இறக்குமதி செய்த ஒருவர் அநுராதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்தரமுல்லை பகுதியை சேர்ந்த 36 வயதான சந்தேகநபர், மலேஷியாவில் இருந்து குறித்த இயந்திரத்தை இறக்குமதி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் போலியாக அச்சிட்டிருந்த 327 அமெரிக்க டொலர்கள் கந்தளாய் மற்றும் அநுராதபுரம் ஆகிய காவல்துறை அதிகாரிகளால் அண்மையில் கைப்பற்றப்பட்டிருந்தன.
பின்னர் அது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நேற்றைய தினம் சந்தேகநபரை கைது செய்துள்ளதாக காவல்துறை ஊடாகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.