Traffic Bot

கொரோனா தொற்றாளர்கள் பற்றிய முழுமையான விபரம்

நாட்டில் நேற்றைய தினம் கொவிட்; 19 தொற்றுறுதியான 551 பேரில் 300 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

அவர்களில் 87 பேர் பொரளை பகுதியில் அடையாளங்காணப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துடம் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கொம்பனித்தெருவில் 30 பேருக்கும், கிருலப்பனை பகுதியில் 29 பேருக்கும், புளுமெண்டல், மருதனை மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதியில் தலா 21 பேருக்கும், அவிசாவளை பகுதியில் 13 பேருக்கும் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அதேநேரம் கம்பஹா மாவட்டத்தில் 52 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 37 பேருக்கும், நுவரெலிய மாவட்டத்தில் 28 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 27 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் 17 பேருக்கும், கண்டியில் 16 பேருக்கும், நேற்றைய தினம் தொற்றுறுதியாகியுள்ளது.

இதேவேளை, பதுளை – பசறை பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் மேல்மாகாணத்தில் இருந்து பசறைக்கு சென்றிருந்த இருவருக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளது.

பசறை டெமேரியா பகுதியை சேர்ந்த 30 வயதான ஒருவருக்கும், காவத்தை பகுதியை சேர்ந்த 25 வயதான ஒருவருக்கும் தொற்றுறுதியாகியுள்ளதாக பசறை பொது சுகாதார பரிசோதகர் நகுலேஸ்வரன் எமது செய்தி பிரிவிடம் குறிப்பிட்டார்

இந்தநிலையில் தொற்றுறுதியானவர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

கடந்த 12 மணித்தியாலங்களில் கிழக்கு மாகாணத்தில் 39 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேல்மாகாணத்தில் வெளியேறுபவர்களுக்காக 11 இடங்களில் முன்னெடுக்கப்படும் ரெபிட் எண்டிஜன் பரிசோதனைகளில் இதுவரை 41 பேருக்கு கொவிட்- 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்ர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

x