தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி பணப் பந்தய சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 13 பேர் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுராதபுர குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நேற்று இரவு 11 மணியளவில் அனுராதபுர தேவநம்பியதிஸ்ஸ பகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 மற்றும் 54 வயதுக்கு உட்பட்டவர்கள். அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். அத்துடன் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அனுராதபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

x