பிறந்த நாள் கொண்டாடத்தில் கலந்து கொண்ட கொரோனா தொற்றுக்குள்ளான நகர சபை உறுப்பினர்

ஹட்டன் டிக்கோயா நகர சபையின் செயலாளர், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் மற்றும் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் எட்டு உறுப்பினர்கள் உட்பட பத்து பேர் 14 நாட்களுக்கு சுயதனிமைபடுத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் டிக்கோயா பொது சுகாதார பரிசோதகர் ராமையா பாலகிருஸ்னண் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் டிக்கோயா நகர சபையின் எதிர்கட்சி உறுப்பினர் ஒருவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கடந்த 19ம் திகதி பிறந்தநாள் விருந்து உபசாரத்தில் கலந்து கொண்டுள்ளதாகவும் இந்த விருந்து உபசாரத்திற்கு நேற்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்ட ஹட்டன் டிக்கோயா நகர சபையின் உறுப்பினர் கலந்து கொண்டதாகவும் குறித்த உறுப்பினருக்கு அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவர் ஊடாக தொற்று பரவியுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகளின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தனிமைபடுத்தப்பட்டுள்ள பத்து பேருக்கும் நேற்று (24) பி.சி.ஆர்.பரீசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் மாதிரிகள் நுவரெலியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.