மூன்றாவது நாளாகவும் தொடரும் மொக்கா தோட்ட மக்களின் போராட்டம்.

மஸ்கெலியா – மொக்கா தோட்ட மேற்பிரிவின் தொழிலாளர்கள் முன்னெடுக்கும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

தாம் நாளாந்தம் பறிக்கும் தேயிலை கொழுந்துக்கு அரைவாசி வேதனமே வழங்கப்படுவதாக கூறி இந்த போராட்டம் இடம்பெற்று வருகிறது.

நாளாந்த வேதனம் பெற 18 கிலோ கிராம் தேயிலை கொழுந்து பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் கூறிய போதும் தேயிலை செடிகளில் கொழுந்து இல்லாமை காரணமாக 12 அல்லது 13 கிலோ கிராமிற்கு மேல் பறிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காலை 7 மணி முதல் மாலை 5.30 மணிவரை கொழுந்து பறித்தாலும் அந்த கிலோ கிராமிற்கு மேல் பறிக்க முடியாமல் உள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தேயிலை செடிகளுக்கு தரமான உரம் உள்ளிட்ட பராமரிப்பு நடவடிக்கைகளை தோட்ட நிர்வாகம் உரிய வகையில் மேற்கொள்வதில்லை என தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அத்துடன் உரிய பராமரிப்பு இன்றி தோட்டம் காடாக மாறி வருவதாக குறிப்பிட்ட தொழிலாளர்கள் அரசாங்கம் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

x