கொழும்பில் இருந்து சென்ற ஒருவரினால் 7 பேருக்கு கொரோனா தொற்று

காலி பத்தேகம சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 7 கொரோனா தொற்றாளர்கள் நேற்று 24 ஆம் திகதி இனங்காணப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டியவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் படமையாற்றிய பத்தேக பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே இவ்வாறு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் குறித்த 7 பேருடன் தொடர்பில் இருந்த 39 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

x